வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (18:18 IST)

ஓட்டுநர் உரிமத்தை நேரில் பெற முடியாது - போக்குவரத்துத்துறை

இனிமேல்  ஓட்டுநர் உரிமத்தை நேரில் பெற முடியாது என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
 
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டிப் பழகியவர்கள் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தின்  பயிற்சி பெற்று, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள  வாட்டார அலுவலகத்தில் வாகனத்தை ஓட்டிக்காட்டி, அதன் பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.
 
முதலில் ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரில் வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் அஞ்சல் மூலமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
 
அதில், இன்று முதல் ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ் நாட்டில் அமல்படுத்தப்படுள்ளதால், எந்தக் காரணத்தைக் கொண்டு ஓட்டுனர் உரிமம் நேரடியாக வழங்கப்படமாட்டாது; அலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுனர் உரிமம் அஞ்சலில் அனுப்பப்படாது என்று தெரிவித்துள்ளது.