புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (18:06 IST)

குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு நாளை சூரசம்ஹாரம்.. குவிந்த பக்தர்கள்..!

சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  

தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நாளை சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது

இந்த நிலையில் குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

கந்த சஷ்டி விழாவிற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது தயார் நிலையில் உள்ளதாகவும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Edited by Siva