ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,024 உயர்வு!!
ஒரே நாளில் ரூ.1,024 உயர்ந்து தங்கம் விலை மீண்டும் உயர்வு.
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையின் இன்று தங்கம் அதிரடியாக விலை உயந்துள்ளது. ஆம், ஒரே நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து ரூ.33,224க்கு விற்பனை ஆகிறது.