1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (08:42 IST)

மது அருந்தி வந்தால் கடும் நடவடிக்கை! – போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

Bus Depot
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரியும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணிமனை ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரியும் நிலையில் அவ்வபோது போக்குவரத்து கழகம் குறித்து வரும் புகார்களின் அடிப்படையில் பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.

அவ்வாறாக தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புகை பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


பேருந்து பணிமனைக்குள் விலங்குகள் அடிப்பட்டி இறக்கலாம் என்பதால் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உள்ளே அனுமதிக்கக் கூடாது. விபத்து ஏற்படும் வாய்ப்பை தவிர்க்க பணிமனைக்குள் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

பேருந்து பணிமனைக்குள் தீ பற்றும் அபாயம் உள்ளதால் எளிதில் தீ பற்றும் பொருட்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாத பணிமனை பணியாளர் தொழில்நுட்ப பணிக்காக பேருந்துகளை இயக்கக் கூடாது.

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Prasanth.K