வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (11:22 IST)

டாக்டர்கிட்ட கேட்காம நீங்களே ஊசி போட்டுக்காதீங்க! – எச்சரிக்கும் சுகாதரத்துறை செயலாளர்!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டாக்டர் அறிவுறுத்தல் இன்றி ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதாமை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் தேவையான அளவு ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணா நகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் மக்கள் மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி தாமாகவே ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்ட அவர், மக்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.