ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (08:59 IST)

நீங்களே மாஸ்க் போடலை.. எங்களுக்கு மட்டும் அபராதமா? – தட்டி கேட்ட வியாபாரிக்கு அடி உதை!

சென்னையில் கடைகளில் மாஸ்க் அணியவில்லை என அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் மாஸ்க் அணியாதது குறித்து கேட்டதால் வியாபாரி தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐசிஎப் பகுதிகளில் உள்ள கடைகளை சோதனையிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அரிசிக்கடை ஒன்றில் ஊழியர்கள் மாஸ்க் அணியவில்லை என அபராதம் விதித்துள்ளனர்.

ஆனால் அபராதம் விதித்த அதிகாரிகளே மாஸ்க் அணியாமல் வந்ததாக அரிசி கடை வியாபாரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அரிசிகடை உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் செயலுக்கு அப்பகுதி வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.