வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:00 IST)

காவல்படையினர் தயார் நிலையில் இருக்க டிஐஜி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் சிறப்பு காவல்படையினரை இன்று மற்றும் நாளை தயார் நிலையில் இருக்குமாறு டிஐஜி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். எந்தவொரு அசாதாரண சூழலையும் சமாளிக்க தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த சுற்றறிக்கை நேற்றே அனுப்பப்பட்ட நிலையில் இன்றுதான் தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக காரணம் எதுவும் வெளியாகவில்லை, ரகசியமாக வைப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த செய்தி ஊடகங்களில் வெளியாக தற்போது காவல்துறையினர் சார்பில் இந்த நடவடிக்கைக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மேலும் இது வழக்காமான நடவடிக்கைதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.