வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (07:33 IST)

கஜா புயல் நிவாரணம்: சென்னையில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சற்றுமுன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருச்சிக்கு புறப்பட்டனர். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை இருவரும் பார்வையிடுகின்றனர்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்ட பின்னர் நிவாரண உதவிகளையும் மக்களுக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.