செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (16:43 IST)

மீண்டும் கனமழை: டெல்டா மாவட்ட மக்கள் அதிர்ச்சி

டெல்டா மாவட்டங்களில் சமீபத்தில் கஜா புயல் காட்டு காட்டு என காட்டிவிட்டு பெரும் சேதத்தை உண்டாக்கி சென்றுவிட்ட நிலையில் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒருசில நாட்கள் ஆகும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களின் மீட்புப்பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால் மீட்புப்பணிகளுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.