திருவள்ளூரில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மார்ச் மாதம் முதல் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றியதாக பல லட்சம் பேர் கைது செய்து விடுதலை செய்யப்பட்டனர்.
பல ஆயிரம் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டனர். ஆனால் நேற்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவள்ளூரில் மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.