செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (16:25 IST)

தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இளைஞர்கள்: நொடிகளில் நடந்த விபரீதம்

திருவள்ளூரில் தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை, மீட்க முயன்ற இளைஞர்கள், ரயில் மோதி இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பழையனூரைச் சேர்ந்தவர் ஜெகன்னாதன். 35 வயதான் இவர், தனது அண்டை வீட்டாரில் வசித்துவரும் சரவணன் என்பவருடன் நேற்று இரவு அரிசி மூட்டையை பைக்கில் ஏற்றிகொண்டு சின்னம்மாப் பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தண்டவாளத்தின் இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கிக்கொண்டது. இதையடுத்து இருவரும் பைக்கை விட்டு இறங்கி, பைக்கை தள்ள முயன்றுள்ளனர். அப்போது சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது.

ரயில் மோதியதில் இருவரும் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இவ்வாறு தண்டவாளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.