திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:54 IST)

ஒரே வாரத்தில் 2வது முறையாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: அதிர்ச்சியில் பக்தர்கள்!

ஒரே வாரத்தில் 2வது முறையாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்: அதிர்ச்சியில் பக்தர்கள்!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கிய நிலையில் இன்று மீண்டும் திருச்செந்தூர் கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி வரை உள்வாங்கியது என்பதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று மீண்டும் திருச்செந்தூர் கடல் சுமார் 200 அடிவரை உள்வாங்கியுள்ளது 
 
200 அடி தூரம் கடல் நீர் உள் வாங்கியதால் பாசி படர்ந்த மண் மேடுகள் தெரிகிறது இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்