வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (16:10 IST)

தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக  வானியை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால்   2 நாட்களுக்கு அந்தமான நிகோபார் பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால்  அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் அங்கு சில பகுதிகளில் மழைபொழிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்ழத காற்றழுத்தம் அந்தமான் நிகோபார் திவில் நிலை கொண்டுள்ளதால், 1ணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக உருப்பெரும் எனவும், தமிழகத்தில் வழக்கத்தை விட 2 முதல்  4 டிகிரி வரை வெப்ப நிலை அதிகமாகப் பதிவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.