செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (11:53 IST)

கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் துக்ளக் ஆசிரியரும் பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தி சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளார்களை சந்தித்தபோது, 'தமிழகத்திற்கு கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி என்று கூறினார்.
 
முன்னதாக அவர் காவேரி மருத்துவமனை மருத்துவர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டு சிகிச்சை மற்றும் உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.