கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!
கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட விசாரணையில் அந்த துப்பாக்கிகள் பீகாரிலிருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் இருந்து நாட்டு துப்பாக்கி வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதாகவும், அந்த துப்பாக்கிகள் தீவிரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கோவை சேரன் மாநகரை சேர்ந்த 23 வயது மணிகண்டன் மற்றும் 23 வயது ஹரிஸ்ரீ ஆகியோரை மடக்கி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பீகாரிலிருந்து இந்த துப்பாக்கிகளை வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கினார்கள், கூலிப்படையுடன் செயல்படும் கும்பலா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அது மட்டும் இன்றி, இதற்கு முன் யார் யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது, பீகாரில் எந்த இடத்தில் இருந்து துப்பாக்கி வாங்கப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva