ஆட்சி மாறியவுடன் முதல் கைது செந்தில் பாலாஜிதான்: அண்ணாமலை
தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் முதல் கைது அமைச்சர் செந்தில்பாலாஜி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதை வருகிறோம். அந்த வகையில் கோவையில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் 21 பாஜகவினர்களை கைது செய்துள்ளது என்றும் கூறினார்.,
தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்தங்கள் அனைத்து விதிகளையும் மீறி பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் எங்களிடம் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தப்பிக்க முடியாது என்றும் தமிழகத்தில் ஆட்சி மாறியவுடன் முதல் நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார் அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது