1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (17:54 IST)

அடாது மழையிலும் 6-வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகா தீபம்:

thiruvannamalai
அடாது மழை பெய்த போதிலும் 6-வது நாளாக தொடர்ந்து திருவண்ணாமலை மகாதீபம் எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது என்பதும் அன்றைய தினம் 2668 உயரம் கொண்ட மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த மகா தீபம் ஒவ்வொரு வருடமும் பதினொரு நாட்கள் மலைமீது காட்சியளிக்கும். இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் மகாதீபம்  தொடர்ந்து 6-வது நாளாக சுடர்விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறது. இதனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva