திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (19:34 IST)

நாளை திருக்கார்த்திகை.. தீபம் ஏற்றுவது எப்படி?

Deepam
நாளை திருக்கார்த்திகை தினம் கொண்டாட இருப்பதை அடுத்து பக்தர்கள் வீடுகளில் அனைவரும் விளக்கு ஏற்றுவார்கள் என்பது தெரிந்ததே. 
 
பொதுவாக மண் விளக்குகளை காலை அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற விடவேண்டும். பின்னர் அவற்றை எடுத்து சுத்தமாக துடைத்து ஆறிய பின் அதில் குங்குமம் சந்தனம் இட்டு பஞ்சு அல்லது நூல் திரி போட்டு நல்லெண்ணெய் மூலம் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு நல்லது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பின்னர் வீடுகளில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவ்வாறு தீபமேற்றுவது அண்ணாமலைக்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக கருதப்படும்
 
குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் விளக்கு ஏற்றவேண்டும். நாளை புதிதாக விளக்குகளை  வாங்கி ஏற்றுவது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva