திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:04 IST)

புரோகிதர் கெட்டப்பில் திருவள்ளுவர்; சிபிஎஸ்சி பாடத்தால் சர்ச்சை! – தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

திருவள்ளுவரை புரோகிதர் போல சித்தரித்து சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் படம் இடம்பெற்றுள்ளதாக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த விவகாரம் தமிழகத்தில் தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்ட புத்தகத்தில் திருவள்ளுவரை குடுமி வைத்த காவி உடையணிந்த புரோகிதர் போல சித்தரித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவள்ளுவரை காவிமயமாக்க முயற்சிகள் நடந்து வருவதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.