செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (00:21 IST)

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம்  என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும்  இருக்கின்றான்.
 
 
* எவருடைய கன்னத்திலும் அடிக்காதீர்கள். ஏனென்றால், முகத்தை அல்லாஹ் தன் கரத்தால் உருவாக்கினான்.
 
* வயிறு புடைக்க உண்ணாதீர்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணாதீர்கள். ஏனென்றால், உங்கள் உள்ளம் இருளாகி விடும்.
 
* இடது பக்கமாக எச்சில் துப்புங்கள் அல்லது உங்கள் பாதங்களுக்கு இடையில் துப்பி மண்மூடி மறைத்து விடுங்கள்.  வலதுபக்கமோ அல்லது மேற்கு திசையிலோ துப்பாதீர்கள்.
* பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
 
* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
 
* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.
 
* சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்
 
* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.
 
* உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.
 
* மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.
 
* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும்  அதிகாரமும் அவனுக்குரியவையே.
 
* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.
 
* இறைவனைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.