செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (15:22 IST)

ஒரே நாடு.. ஒரே இனம்னு கிளம்புனா.. இதான் கதி! – திருமாவளவன் ட்வீட்!

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் சங்பரிவாரங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.

இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியால் மக்கள் திண்டாடி வரும் நிலையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் கோத்தாபய ராஜபக்சேவின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், ரணில் விக்ரமசிங்கெ வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர்.

இந்த போராட்ட சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “ஒரே இனம் ஒரே மதம் ஒரே கலாச்சாரம் ஒரேதேசம் எனும் இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி இனக்கொலை ஃபாசிசமாகி ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே பூகம்பமாகத் திரும்பி சிங்கள பௌத்த பேரினவாத ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது. சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை” என தெரிவித்துள்ளார்.