1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (17:54 IST)

கோத்தபயா தலைமறைவு: தற்காலிக அதிபர் இவரா?

srilanka
இலங்கை அதிபர் தலைமறைவாகி உள்ளதை அடுத்து தற்காலிக அதிபராக அந்நாட்டின் சபாநாயகர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது என்பதும் ராணுவமும் போராட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிட்ட நிலையில் அதிபர் ராஜபக்சே தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்காலிக அதிபராக இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நாளை கூட இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது