வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

கமல் கட்சிக்கு ஏன் செல்லவில்லை… திருமா வளவன் பதில்!

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை பெற்றிருந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து 6 தொகுதிகளை பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காலூன்ற விடக்கூடாது என்பதற்காகவும் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காகவும் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகவும் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறைந்த தொகுதிக்கு ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ‘சமூகநீதியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல பேசுபவர்கள் என் தம்பி திருமா வளவனுக்கு 6 தொகுதிகள் மட்டுமே கொடுத்துள்ளனர். அவர் இங்கிருக்க வேண்டியவர். வருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார். கமலின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து திருமா வளவன் இதற்கு பதிலளித்துள்ளார். அதில் ‘சிட்டிக்கு வெளியே ஒரு ஏக்கர் வாங்குவது, சிட்டிக்கு உள்ளே ஒரு கிரவுண்ட் வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. ஜெயிக்கிற கூட்டணியில் 6  இடம் வாங்குவதற்கும் தோற்கிற கூட்டணியில் 60 இடம் வாங்குவதற்கும் வித்தியாசம் உண்டு’ எனக் கூறியுள்ளார்.