செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 6 மார்ச் 2021 (09:02 IST)

இணையதளம் மூலம் நள்ளிரவில் ஒப்பந்தம்: பாஜக-அதிமுக குறித்த அதிர்ச்சி தகவல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது 
 
இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான செய்திகள் வெளியானது என்பதும் ஒப்பந்தம் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அதிமுக பாஜக ஆகிய இரு தரப்பு தலைவர்களும் இணையதளம் மூலம் கையெழுத்திட்டு நள்ளிரவில் ஒப்பந்த பங்கீடு நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது 
 
கன்னியாகுமரியிலிருந்து பாஜக மாநில தலைவர் எல் முருகன், ஊட்டியிலிருந்து சிடி ரவி ஆகியோர் மெயில் அனுப்பி தொகுதி பங்கீட்டில் கையெழுத்து பெறபட்டுள்ளதாகவும் நள்ளிரவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கையெழுத்திட்டு தொகுதி ஒப்பந்தம் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தாமல் இணையதளம் மூலம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.