செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 ஜூன் 2018 (12:22 IST)

பெண் காவல் அதிகாரியிடமே வேலையை காட்டிய கொள்ளையர்கள்

கோவையில் பெண் காவல் அதிகாரியிடம் கொள்ளையர்கள் 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் நகை கொள்ளையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை குறிவைக்கும் கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.
 
இந்நிலையில் கோவை கணபதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரான இந்திராணி(62)  வாக்கிங் சென்ற போது அவரை பின் தொடர்ந்த கொள்ளையர்கள், இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
 
இதுகுறித்து இந்திராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.