சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் , அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமை ஆற்றினர்.
இந்நிலையில் தமிழகத்தில் அன்றைய மொத்த்அ வாக்குப்பதிவு சதவீதத்தை தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக சட்டசபை தேர்தலில் 72.81 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4,57,76,311 வாக்குகள் பதிவாகியுள்ளன
ஆண் வாக்காளர்கள் : 2,26,03,156 பேரும், பெண் வாக்காளர்கள் : 2,31,71,736 பேரும் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.