வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (11:46 IST)

அதிரடி காட்டினாலும் அடங்காத அதிமுக நிர்வாகிகள்! தேனியிலும் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர்!

சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டியதாக கோவை, திருச்சி அதிமுக பிரமுகர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தேனியிலும் ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவரது வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர்கள் சொல்லி வரும் நிலையில் அதிமுக பிரமுகர்கள் சிலர் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டியதற்காக கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த இருவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் அதிமுக இளைஞரணி தலைவர் ஒருவர் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.