1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 ஜூலை 2018 (10:41 IST)

ப. சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராப்ஸ் தோட்டச்சாலையில் அமைந்துள்ளது.
 
இந்நிலையில் இவரது வீட்டிலிருந்தவர்கள் வெளியூர் சென்றுவிட்டு நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த  ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபார் ரொக்கமும் வைர நகைகளும் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆயிரம் விளக்கு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், கடந்த 5 ந் தேதி முகமூடி அணிந்த சிலர் சிதம்பரத்தில் வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.