சென்னையில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை

chennai
Last Modified ஞாயிறு, 8 ஜூலை 2018 (10:06 IST)
சென்னையில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அஸ்வினி(20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அஸ்வினியும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த தென்னவன் (25) என்பவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின் இருவரும் காதலித்து வந்தனர்.
 
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்த தென்னவனை, கடந்த மே 3-ந் தேதி அஸ்வினி தன் வீட்டில் யாருமில்லா நேரத்தில் அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அஸ்வினி வீட்டிற்கு வந்த தென்னவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.
 
இதனால் மன வேதனையில் இருந்த அஸ்வினியை அவரது பெற்றோர் உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.
 
மிகவும் சோகத்தில் இருந்த அஸ்வினி, நேற்று வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :