1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (00:44 IST)

மாநகராட்சியில் வாக்குசதவிகிதம் குறைந்த ரகசியம் இது தான் வாக்குப்பதிவு 75.84 % தான் மீதமுள்ள 24.16 % எங்கே

மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி நல்ல பல திட்டங்களை தீட்டினால், அந்த மாநிலத்தில், இடைத்தேர்தலோ, ஊரக உள்ளாட்சி தேர்தலோ, நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலோ நடந்தால் 100 விழுக்காடு தேர்தல் வாக்குப்பதிவு பதிவாகும்.
 
இந்நிலையில், நேற்று நடந்து முடிந்த தமிழக நகரமைப்பு தேர்தலில், முழுக்க, முழுக்க, திமுக கட்சியினை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும், முதல்வர் மகனும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ வுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் காட்டிய அளவு கூட கவனம் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி காட்டவில்லை என்கின்றனர் திமுக கட்சியினரே, ஏன், என்றால் ஏற்கனவே இவர் சேலம் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில், பின்பு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் பதவி வகித்து பின்னர், அங்கேயே, முகாமிட்டு, கரூர் மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகளையும் அவருடன் வைத்து கொண்டு கரூர் மாவட்ட்த்தினை விட்டு விட்டார் என்றும் கூறுகின்றனர் திமுக கட்சி நிர்வாகிகளும், பிற கட்சி நிர்வாகிகளும், அதுமட்டுமில்லாமல், திமுக கட்சியின் கூட்டணியில் வகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி துரோகம் செய்துள்ளதாகவும், கரூர் மாநகராட்சியில் 12 வது வார்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி, பின்னர் திமுக வினை சார்ந்த வேட்பாளரே அங்கேயும் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவும் நடந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், கூட்டணிக்கு ஒதுக்கிய கரூர் மாநகராட்சியின் மூன்று வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் சுயேட்சையாக திமுக பிரமுகர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஒதுக்கி கொடுத்துள்ளார். 12 வது வார்டு மற்றும் 16 வது வார்டில் போட்டியிட்டவர்களுக்கு தான் அதிகாரப்பூர்வ சின்னம் தென்னைமரம் சின்னம் திமுக வின் சின்னம் என்று வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் போது, வாக்குச்சாவடியிலேயே, திமுக பிரமுகர்கள், திமுக மப்ளர்களை போட்டு கொண்டு, அந்த மப்ளரின் மேல், தென்னை மர சின்னம் அடங்கிய மப்ளரையும் போட்டுக் கொண்டு வாக்குகள் கேட்டது ஜனநாயக முறைப்படியா ? என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அது ஒரு புறம், மூத்த திமுக நிர்வாகிகள் யாருக்கும் சீட் ஒதுக்காத நிலையில், தற்போதைய திமுக மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியுடன் அதிமுக, அமமுக கட்சியில் பயனித்து திமுக கட்சிக்கு வந்தவர்களுக்கு தான் முக்கியத்துவமாம், 100 க்கு 90 விழுக்காடு அவருடன் கட்சி மாறியவர்களுக்கு தான் முன்னுரிமை, 10 விழுக்காடு மட்டும் தான், திமுக வின் உண்மை விசுவாசிகளுக்காம் என்று முனு முனுக்கின்றனர் அப்பகுதி திமுக கட்சி நிர்வாகிகள். இதைவிட்டு இன்னொரு டிவிஸ்ட், என்னவென்றால் நான் இவ்வளவு செலவு செய்து விட்டு இந்த கட்சிக்கு வந்து உள்ளேன், என்னிடம் உள்ளவர்கள் இருக்கலாம், பிடிக்காதவர்கள் வேறு கட்சிக்கு சென்று விடலாம் என்று திமுக கட்சிக்கு மாறியவுடன், இவர் போட்ட முதல் ஆர்டர் ஆம் என்கின்றனர் திமுக நிர்வாகிகள். ஆகவே கரூர் மாநகராட்சியில் 100 சதவிகிதம் பதிவாக வேண்டிய வாக்குசதவிகிதம் 75.84 சதவிகிதம் தான் பதிவானது. மீதமுள்ள 24.16 விழுக்காடு தங்கள் வாக்களிக்க விரும்பாமல், ஒதுங்கியுள்ளனர்.