தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸ்
இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக 4வது இடமே பிடித்துள்ளதால், எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 125 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸால் இந்த வெற்றியைப் பெருவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.