புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anadakumar
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (21:13 IST)

எரிசாராயம் கடத்தி, பாட்டிலில் விற்றவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரியும்- அமைச்சர் விஜய பாஸ்கர்

16 கட்சிக்கு சென்று வந்தவர் இன்று நான் செய்தேன், நான் செய்தேன் என்று  சொல்வதா ? அனைத்தும் செய்தது அதிமுக கட்சி தான் என்றும் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் என்றும், எரிசாராயம் கடத்தி, பாட்டிலில் விற்றவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரியும்  என்று மாஜி அதிமுக உறுப்பினரான செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் கொடுத்த சமபவம் – தமிழக அளவில் கரூர் அரசியல் சூடுபிடிக்கின்றது.

வெச்ச மொய் வைச்சது எங்களுக்கு பழக்கமல்ல, கூட வைப்பது தான் எங்களது வழக்கம் – தி.மு.க வினர் கல் எடுத்து அடித்தால் அதிமுக வினர் வேடிக்கை பார்ப்போமா ? என  கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

கரூரில் 50 ஆண்டு கால கோரிக்கையான பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றி, குகை வழிப்பாதையினை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டினை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., குடிநீர் திட்டம் குறித்து இங்குள்ள தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜி விளக்கமாக பேசி வருகின்றார். என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மூன்று திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். தி.மு.க ஆட்சி காலத்தில் வெறும் அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டது. அரசாணையுடன் நின்று விட்டது. பின்னர் 4 ½ ஆண்டுகாலம் எங்களது கட்சியில் இருந்து விட்டு அமைச்சர் பதவி வகித்து விட்டு தற்போது தி.மு.க விற்கு சென்றவுடன் பேசுகின்றார்.

இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று, 4 ½ ஆண்டுகாலம் அமைச்சர் பதவி வகித்து விட்டு இப்படி பேசுவதா ? நாங்கள் வந்த பிறகு முன்னாள் துணை சபாநாயகர் தம்பித்துரையின் முயற்சியினாலும், என்னாலும் 5 மேல் நிலை குடிநீர் நீர் தேக்க தொட்டியில் ஒரு இடத்தில் வெறும் குழி மட்டுமே பறிக்கப்பட்டும், ஒரு பகுதியில் வெறும் கால்கள் மட்டுமே இருந்து எலும்புக்கூடுகளாக இருந்தது. ஆகவே எனது முயற்சியில் ஆங்காங்கே குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கொண்டு வந்து தற்போது திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது. அவருடைய ஆட்சி காலத்தில் பாதி பைப் லைன் போட வில்லை, வாரத்திற்கு ஒரு முறை கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது,. செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த போது., மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் வந்தது, ஆங்காங்கே சாலைமறியல் எல்லாம் தெரியாதா ? ஆகவே தற்போது குடிநீர் குழாய் மூலம் தினந்தோறும் குடிநீர் வழங்குவதற்காக, பைப்லைன் சீரான முறையாக விநியோகம் செய்ய சீரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நிச்சயம் இரு தினங்களுக்கு ஒரு முறை என்று வழங்கப்படும் என்றார். 5 வருடம் செந்தில் பாலாஜி வேடிக்கை பார்த்து விட்டு தற்போது குறை சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

மேலும் குறை சொல்வதை மட்டுமே வாடிக்கையாக கொண்டவர் செந்தில் பாலாஜி, 16 கட்சிக்கு சென்று வந்து விட்டவர் நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொல்ல கூடாது, வெட்கம் இருந்தால், ரோசம் இருந்தால் இனி சொல்லக் கூடாது, திட்டங்களை கொடுத்தவர் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், ஆனால் நீ (செந்தில் பாலாஜி) 16 கட்சிக்கு சென்று விட்டு நான் செய்தேன் நான் செய்தேன் என்று சொல்ல கூடாது என்றார். இனிமேல் கழுத்தில் எழுதி தொங்கவிட்டு செல்ல வேண்டுமென்றார்.

செந்தில் பாலாஜி கொண்டு வர நினைத்த அரசு மருத்துவக்கல்லூரி வாங்கல், ஆனால் நான் காந்திகிராமம் பகுதிக்கு மக்கள் கொண்டு வந்தேன் என்றார். மேலும், நகர செயலாளர் மீது கேஷ் இருக்கு என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, இதே குளத்துப்பாளையம் பிரமுகரிடம் இருந்து நிலத்தினை அபகரித்து தற்போது கேஸ் நடைபெற்று வருவதையும், 24 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தி யார் காலில் விழுந்து கேஸில் இருந்து தப்பித்தாய் என்று ஊருக்கு தெரியும், கள்ளச்சாராயம் காய்ச்சி பாட்டிலில் விற்றவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரியாதா ? என்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்னும் சொல்ல போனால் பொழுப்பு தண்டவாளத்தில் ஏறி விடும் என்றும்  ரயிலில் ஏறுவது போல என்றார். மேலும், நான் கொண்டு வந்த திட்டங்கள் என்று அம்மா சாலை, ரிங் ரோடு, மருத்துவக்கல்லூரி ஆகியவைகளை நான் கொண்டு வந்தது என்றும் அவர் கொண்டு வந்த பட்டியலை விவரித்தார்.

எந்த கட்சியில் இருந்து செய்தாரோ, அந்த கட்சி தான் செயல்பட்டது என்றும் அ.தி.மு.க கட்சியில் இருந்து விட்டு அந்த கட்சியில் செய்தால் தான் அதைப்பற்றி சொல்ல வேண்டும், ஆகவே அனைத்தும் கொடுத்தது முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார். மேலும், எம்.பி தேர்தலில், அ.தி.மு.க வினர் கம்பி எடுத்து அடித்தார்கள் என்று கூறி வரும் செந்தில் பாலாஜி, தி.மு.க பிரமுகர் ஒருவர் கற்களால் தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்ப்பதா ? என்றதோடு, மேலும், ஆங்காங்கே மொய் வைப்போம் என்று செந்தில் பாலாஜி கூறிவருகின்றார்.

நீங்கள் வைச்ச மொய்யை வைக்க மாட்டாய், ஆனால் நாங்கள் ரூ 100 வைத்தால், ரூ 200 வைப்பது தான் கிராமத்து நாகரீகம், ஆகையால் வைச்ச மொய்யை விட, சிறப்பாக வைப்பது தான் அ.தி.மு.க வினர் என்றும் அரசியல் நாகரீகம் கருதி மேலும் பல்வேறு வற்றை பேசவில்லை என்றும் கூறி கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தீட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சீறிய முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர் நடைபாதையில் மக்களோடு மக்களாக நடந்தே சென்று பின்னர் மீண்டும் அந்த பாதை வழியாகவே வந்து நாட்டுப்பண் முடிந்து சென்னைக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கரூர் வடக்கு செயலாளர் பாண்டியன், கரூர் நகர மத்திய செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார், கரூர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், கரூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் தர்மேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கரூர் கமலக்கண்ணன், க.பரமத்தி மார்க்கண்டேயன், அரவக்குறிச்சி கலையரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.