1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 8 மே 2021 (20:37 IST)

ஏழைகளுக்கு இலவச உணவு கொடுத்து உதவும் நபர்

ஏழை, எளியவர்களுக்கு தொடர்ந்து உணவை இலவசமாக வழங்கி உதவி வருகிறார் ஒரு தன்னார்வலர். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள்ள கொரோனா இரண்டாவது அலையினால் ஏற்கனவே சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அரசல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தில் வசித்து வரும் தன்னார்வலர், அங்குள்ள ஏழை, எளிய மற்றும் பசியால் வாடுபவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து அவர்களின் பசியாற்றி வரும் சேவை செய்துவருகிறார். மேலும் பசிக்கிறவர்கள் எடுத்துக் கொள்ளலாம் காசு தேவையில்லை என்று அவர் தனது தள்ளுவண்டியில் எழுதியுள்ளார். அவரது சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.