பேய்விரட்டுவதாக பெண் சித்ரவதை ..போலி சமியார் கைது !
உலகம் எவ்வளவு தொழில்நுட்பத்திலும் நாகரீகத்திலும் வளர்ந்தாலும் இன்னும் மூடப்பழக்கத்திலிருந்து விடுபவில்லை என்பதற்க் ஏற்ப சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவருகின்றன.
அந்தவகையில், பேய் விரட்டுவதாகக்கூறி ஒரு பெண்ணை சாமியர் அடித்த வீடியோ காட்சிகள் வைரலானது. இந்நிலையில் சாமியாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கம்மான் மேட்டுப் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது. இங்கு சாமியாராக உள்ள்வர் அனில்குமார். இவர் அப்பகுதி மக்களுக்கு குறி சொல்வது, பேய்விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஒரு பெண்ணுக்குப் பேய் விரட்டுவதாகக் கூறி அவரை அடித்துச் சித்ரவதை செய்த வீடியோ காட்சிகள் வைரலானது. எனவே இவரை போலீசார் கைது செய்து நாமக்கால் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர்.