1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (12:45 IST)

கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளை தவிர்த்து அதிகாரிகள் வாங்கிக் கொண்டு போஸ் கொடுத்ததால் கடுப்பான அமைச்சர்!

காஞ்சிபுரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள எஸ் எஸ் கே வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
 
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடையை அமைச்சர் வழங்கினார்
 
இதன்பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டம் மையத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களுடன் கோரிக்கை மனுக்கள் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அதிகாரிகளுக்கு இடையே பேசிய அமைச்சர் அன்பரசன்.....
 
இங்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் ஏற்கனவே கொடுத்து பயனற்ற முறையில் இருப்பதாகவும் இதனை அதிகாரிகள் சரியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்வு காணவில்லை.
 
அனைத்து மனுக்களுமே ஏற்கனவே கொடுத்தும் தீர்வு காணாமலே உள்ளது,
 
பொது மக்களிடம் சென்று மனுக்களை பெற்று தீர்வு காணுங்கள் அதிகாரிகளுக்கு புன்னியமாகும் என  அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
அப்போது கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளை தவிர்த்து அதிகாரிகளை வாங்கிக் கொண்டு போஸ் கொடுத்ததால் கடுப்பானார் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்