1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (12:18 IST)

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த ஆசிரியருக்கு அருவாள் வெட்டு!

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கக் கோவில் தெருவில் உள்ள அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 
 
கடைசி பாட வகுப்பை 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் சிவகுமார் வகுப்பறையில் எடுத்துக் கொண்டிருந்தார்.
 
அப்பொழுது திடீரென ஒரு மாணவர்  முகத்தை முக கவசம் அணிந்து உள்ளே வந்து தனது பேண்டில் வைத்திருந்த நீளமான கத்தியை வைத்து வணிகவியல், வரலாறு படிக்கும் மாணவரை வகுப்பறையில் கையில் வெட்டி உள்ளார். 
 
இதனை பார்த்த ஆசிரியர் சிவக்குமார் தடுக்க சென்ற பொழுது அவர் தலையில் அந்த மாணவர் வெட்டி உள்ளார். 
 
காயமடைந்த ஆசிரியரை சக மாணவர்கள் அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து வந்தனர். 
 
இந்த இரண்டு மாணவர்களுக்கும் இதற்கு முன்பே முன் பகை உள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். 
 
மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு சம்பவத்தில் இருவருக்கும் பகை  இருந்துள்ளது. 
 
கடந்த வாரத்தில் இன்ஸ்டாகிராமில் வெட்டிய மாணவர் ஒரு பதிவிட்ட பொழுது வெட்டுப்பட்ட மாணவர் அதற்கு பதில் பதிவை போட்ட கோபம் அடைந்து வெட்டியதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
 
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் வெட்டுப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியரை நேரில் பார்த்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 
 
வெட்டிய உயிரியல் பாட பிரிவை எடுத்து படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர் தப்பி ஓடி நிலையில் தந்தையை காவல் நிலையத்தில் பிடித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .