புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (06:45 IST)

சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்?

சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்:
தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.
 
நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இன்றைய பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியில் என்னென்ன கவர்ச்சிகரமான அறிவிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
 
தேர்தலை முன்னிட்டு அதிரடி சலுகைகள், கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விவசாயிகளின் பயிர் கடன் ரத்து, உள்பட பலவித அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இலவச அறிவிப்புகளும் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மொத்தத்தில் இன்று துணை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புடன் கூடிய சலுகை பலவகையான பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது