வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2019 (15:51 IST)

’ஜாக்கி வைத்து உயர்த்தப்பட்ட வீடு’ இடிந்து விழுந்து விபத்து ! பலர் காயம்

தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் மக்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது. இது நல்லவிதமான வளர்ச்சி என்றாலும் கூட்ட அதில் பலவித ஆபத்துக்களும் இல்லாமல் கிடையது. அதுபோல் ஒரு சம்பவம் சென்னை கொளத்தூரில் நடந்துள்ளது.
சென்னைக் கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் அம்பேத்கார் நகர் 3வது தெருவில் வசித்துவந்தவர் கில்பர்ட் ( 30). இவர் தொழில் அதிபராக உள்ளார். இவரது மனைவி சுப்ரியா ( 30). 
 
இந்த தம்பதியரினருக்கு அப்பகுதில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் தரைதளப் பகுதி தாழ்வாக இருந்ததால், மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் செல்வதாகவும், அதில் வாடகைக்குக் குடியிருப்போர் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் அங்கு குடியிருந்தவரகளை காலிசெய்துவிட்டு , சமீபத்தில் நவீன தொழில் நுட்பத்தில் ஜாக்கி உதவியுடன் பள்ளத்திலிருந்து வீட்டை சுமார் 15 அடி உயர்த்தினர்.
 
வீட்டை உயர்த்திய பின்னர், அங்கு ஏழுமலை, கதிர்வேல், அம்சவள்ளி,அந்தோணிசாமி ,ஆகிய 4 பேர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் நேற்று மாலை கீழ் தளத்தில் இருந்த குளியளரையில் ஏழுமலை சாரம் அமைத்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.மற்ற மூவரும் வீட்டின் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்தனர்.அபோது ஏழுமலை கையில் இருந்த சுத்தியலால் கட்டிடத்தை தெரியாமல் அடித்தார். அதில் வீட்டின் முன்பகுதி போர்டிகோ இடிந்து விழுந்தது.
 
இந்த விபத்தில் 4 தொழிலாளிகளும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்தோர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சமபவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் உயிருடன் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
இதுகுறித்து ராஜமங்கலம் போலீஸார் விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.