’அப்படி நடிக்கும் ’போது திமிர் தானாகவே வந்தது - யோகிபாபு
தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய காமெடியனாக வலம் வருபவர் யோகிபாபு. லேட்டஸ்ட்டாக வெளியான அத்துணை படத்திலும் காமெடியனாக கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார் யோகிபாபு.
தற்போது அவர் முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மபிரபு என்ற படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட யோகிபாபு கூறியதாவது :
இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கல் அதாவது போலோகத்தில் சாம். எமலோகத்தில் சாம். நாங்கள் இருவரும் 15 வருடகால நண்பர்கள். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். யாருமே இல்லாத இடத்தி விளையாடமுடியாது. எல்லோரும் உள்ளார்கள் அவரவர் வேலையை அவரவர் செய்து வெற்றி பெறுகிறார்க்ள். மேலும் முதலில் எனக்கு இப்படத்தில் மேக் அப் போட்ட போது யாருக்குமே திருப்தி இல்லை. அப்போது ரேகா கூறினார் : இந்தக் கெட்டப் போட்டாலே தானாகவே திமிர் வந்துவிடும் என்று.
இந்தக் கெட்டப்போட்ட போது நான் அப்படியேதான் உணர்ந்தேன். ஆண்டவன் கட்டளை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களை அடுத்து இப்படமும் பேசப்படும் என்று தெரிவித்தார்.