வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (08:03 IST)

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தாரா தங்கமணி?

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவதாக அந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்
 
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ஆன் ஆண்டு வரை மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான சொத்துகள் சேர்த்ததாக புகார் எழுந்து உள்ளது. இதனை அடுத்து தங்கமணி அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தங்கமணி அந்தச் சொத்துக்களை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் சில ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தாரா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது