1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (12:56 IST)

அஹிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தை காப்போம்: கமல்ஹாசன்

1930 ஆம் ஆண்டு இதே மார்ச் 12ஆம் தேதி மகாத்மா காந்தி அடிகள் தண்டி யாத்திரை என்ற போராட்டத்தை கையெடுத்த நிலையில் இந்த போராட்டம் குறித்து நினைவுபடுத்தும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 
 
1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்ட 79 போராட்ட வீரர்களுடன் காந்தியார் தொடங்கிய யாத்திரை இந்திய விடுதலை வரலாற்றின் மாபெரும் திருப்புமுனைகளுள் ஒன்றாக அமைந்தது. 
 
பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து புண்ணான கால்களுடன் 61 வயது முதியவர் தண்டி கடற்கரையில் குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளி தன் கரங்களை வான் நோக்கி உயர்த்திச் சொன்னார் ‘நம் கையில் இருப்பது வெறும் உப்பு அல்ல. இது இந்தியாவின் கெளரவம். நமது கரங்கள் தாளாதிருக்கட்டும்’ 
 
ஆம் பெரியவரே… நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள். 
 
 
Edited by Mahendran