ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (11:20 IST)

நிக்காமப் போயிட்டு இருக்கு… உலகளவில்150 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சும்மள் பாய்ஸ்!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்.

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மும்பையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப் பட்டு வருகிறது. இந்த படம் வட இந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வெளியாகி 20 நாட்களை நெருங்கும் இந்த படம் தற்போது வரை உலகளவில் 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நான்காவது வாரத்திலும் அதிகளவிலான காட்சிகள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையிடப்பட்டு வருகிறது.