தமிழர்கள் இந்துக்கள் இல்லை.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TamilsAreNotHindus
ராஜராஜ சோழன் இந்து அரசனா என தொடங்கிய சர்ச்சை தற்போது தமிழர்கள் இந்து இல்லை என ட்ரெண்டாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ராஜராஜ சோழன் இந்து அரசனாக சித்தரிக்கும் முயற்சிகள் ந சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், தமிழர்களின் அடையாளங்கள் திரிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக திரிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் பேசி இருந்தார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே கிடையாது என வெற்றிமாறனுக்கு ஆதரவாக சீமான், கருணாஸ் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். அதேசமயம் அவர் இந்து அரசர்தான் என இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் சிலரும் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை என்றும், வெள்ளைக்காரன் வைத்த பெயர் இந்து என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் #TamilsAreNotHindus என்ற ஹேஷ்டேகை பலரும் வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Edited By: Prasanth.K