புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:07 IST)

கொரோனாவால் பயணிகள் குறைவு; சிறப்பு பேருந்துகளில் 1 லட்சம் பேர் பயணம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதால் தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் பலவற்றை இயக்கி வருகிறது.

தற்போதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதலாக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இதுவரை 2,763 சிறப்பு பேருந்துகளில் 1,14,665 பேர் பயணம் செய்துள்ளனர். கொரோனா பரவல், பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.