வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (13:19 IST)

போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் 2021 ஆம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 150 நாட்களுக்குள் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாகவே பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய், 200 நாட்களுக்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதம் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் 
 
இந்த உத்தரவின்படி போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 561 பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது