திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:33 IST)

இரண்டு கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர்! – தமிழக அரசு அறிவிப்பு!

TN assembly
தமிழகத்தில் உள்ள இரண்டு அரசு கல்லூரிகளுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு சென்னை மரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கும் பணி, மு.கருணாநிதியின் விருப்பமான மதுரையில் நவீன நூலகம் அமைக்கும் பணி முதலியவற்றை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதுபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.