முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் ....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நய ன்தாரா தென்னிந்திய திரையுலையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர், ஷாருக்கானுடன் பாலுவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது மார்க்கேட் மேலும் உயர்ந்தது, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார், அவரது சம்பளம் ரூ.5 கோடி முதல் ரூ. 8 கோடி முதல் வாங்குவவதாக கூறப்படுகிறது,
கடந்த ஆண்டு கணவரை விவாகரத்து செய்த சமந்தா, தற்போது, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
நடிகை அனுஷ்கா ஒரு படத்தில் நடிக்க பாகுபலி படத்திற்குப் பின் ரூ.6 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
விஜய் உடன் பீஸ்ட் படத்தின் நடித்துள்ள பூஜா ஹெக்டே ஒரு படத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 கோடி வரைபெறுவதாகக் கூறப்படுகிறது.
விஜய்66 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள ராஷ்மிகா மந்தா ரூ 2 கோடி முதல் ரூ.2.5 கோடியும், கீர்த்தி சுரேஷ் ரூ.1 - 3 கோடி வரையிலும்,, அஜித் 61 படத்தின் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள ரகுல் பிரீத் சிங்க் ரூ .1 - 3 கோடி வரையிலும் பெறுவதாகக் கூறப்படுகிறது.