புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 22 மே 2021 (15:06 IST)

நாளை ஒரு நாள் அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் என்னென்னெ?

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவக் குழு பரிந்துரைத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். 
 
நாளை வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பயணிக்க அரசு, தனியார் பேருந்து இயங்க அனுமதி. 
 
மக்கள் நலனுக்காக ஹோட்டல் ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் வழங்க அனுமதி.
 
நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி.
 
பெட்ரோல் பங்குகள், மெடிக்கல் கடைகள் வழக்கம் போல அனுமதி.
 
மருத்துவ காரணத்துக்காக மாவட்டம் உள்ளே பயணிக்க இ.பாஸ் தேவையில்லை.
 
விருப்பம் உள்ள பேருந்து நிறுவனம் இப்பொழுது இருந்தே பேருந்துகளை இயக்கலாம் இது நாளை இரவு வரை அனுமதி.
 
ஹோட்டல்களில் பார்சல் வழங்க மட்டும் அனுமதி. பேக்கரி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை.
 
இன்று மாலை முதல் நாளை இரவு வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.