செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:31 IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை: தமிழிசை செளந்தரராஜன்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் நான் வைத்த கோரிக்கை என்றும், அந்த கோரிக்கையை நிறைவேற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்றும் புதுவை கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக  நான் வைத்த கோரிக்கையை ஏற்று
சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில்சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்தார்.
 
வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய  மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Edited by Siva