புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (17:15 IST)

தமிழக உரிமையை யாரிடமிருந்து பெறப்போகிறார் தமிழிசை?

தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் தமிழக பாஜக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியதாவது:-
 
கட்சிகளின் எல்லை கடந்து அத்தனை தலைவர்களும் தமிழகத்தின் நலனுக்காக அக்கறையுடன் கலந்து கொண்ட கூட்டம். தமிழக பாஜக, தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர முழுமையான ஈடுபாட்டுடனும், ஆதரவுடனும் இருக்கும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறேன். 
 
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசின் தீர்ப்பாக கருத முடியாது. கர்நாடக அரசு இதுவரை நமக்கு முழுமையாக 50 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் திறந்துவிட்டது கிடையாது. இன்று நமது உரிமை நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பத்தில் தமிழக பாஜக உறுதியோடு இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக களமிறங்கியது வரவேற்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும், தமிழிசை கூறியது போல் தமிழகத்தின் உரிமையை யாரிடம் இருந்து பெற்றுத்தர போகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏற்படுவதில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.